ஒரே நாளிலேயே திருமணம் செய்துகொண்ட 200 க்கும் மேற்பட்டோர்
24 தை 2025 வெள்ளி 10:19 | பார்வைகள் : 201
தாய்லாந்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், தாய்லாந்து நாடாளுமன்றத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு முழு சட்டம், நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் பெறமுடியும். இந்த சட்டம் அமுலுக்கு வந்த முதல் நாளிலேயே தலைநகர் பாங்காக்கில் 200க்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் உற்சாகத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.
இது தங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்த தன்பாலின ஈர்ப்பாளர்கள், உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் இதனை அங்கீகரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
ஆசியாவில் தைவான், நேபாளம் நாடுகளை தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் மூன்றாவது நாடு என்ற பெருமையை தாய்லாந்து பெற்றுள்ளது.