ரஷ்யாவின் ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்
24 தை 2025 வெள்ளி 11:58 | பார்வைகள் : 472
ரஷ்யாவுக்கு உரித்தான ரியாசான் எண்ணெய்(Ryazan Refinery) சுத்திகரிப்பு நிலையம் மீது ஜனவரி 24, 2025 அன்று அதிகாலை தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் நாடானது இந்த ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டு இருக்கும் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த ட்ரோன் தாக்குதலில் பரவலாக தீ பரவி பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிகாரிகள் சில தாக்குதல் வானூர்திகளை (UAVs) வீழ்த்தியதாக தெரிவித்திருந்தாலும், ஏற்பட்ட சேதத்தின் அளவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை சுட்டிக் காட்டுகிறது.
பல்வேறு இணைய தளங்கள் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களில் வெளியான தகவல்களின்படி, இந்த தாக்குதல்கள் உக்ரைனிய படைகளால் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் துல்லியமாக நிகழ்ந்ததாகவும், பரவலாக தீ பரவியதால் தீயை அணைக்க பல நாட்கள் ஆகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் சுத்திகரிப்பு நிலையத்தை மட்டுமல்லாமல், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளையும் பாதித்துள்ளது.
அத்துடன் இச் சம்பவத்தில் மனித உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்று இதுவரை தெரியவரவில்லை.