பாலியல் பற்றிய கல்வி கற்பிப்பது "அவசரமானது" CNCDH.
24 தை 2025 வெள்ளி 12:06 | பார்வைகள் : 1724
பிரான்சில் சிறுவர்களுக்கு பாலியல், ஆண்-பெண் வேறுபாடு,உணர்ச்சி, சமூகவலைத்தளங்களில் மற்ற பாலினத்தவருடனான உறவு போன்றவற்றை கற்பிக்க வேண்டிய தேவை கருதி 2001 சட்டம் கொண்டு வரப்பட்டது ஆனால் இதுவரை அவை பாடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் (nationale consultative des droits) CNCDH இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு, "சிறார்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, அவர்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவது அவசியம்" என்று CNCDH அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சரியான விழிப்புணர்வு இன்றி சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றனர், பாடசாலைகளில், பொது இடங்களில் தங்களின் பாலியல் உணர்வை வெளிப்படுத்த முற்படுகின்றனர். இதனால் அந்தரங்க புகைப்படங்களை பகிர்தல், தகாத வலைப்பின்னலில் இணைதல் போன்ற ஆபத்து அறியாத செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவே கல்வியின் மூலம் அவர்களுக்கான தெளிவுபடுத்தலை ஏற்படுத்த வேண்டியது அரசினதும், கல்வித் துறையினதும் கடமை எனவும் CNCDH மேலும் எச்சரித்துள்ளது