பளபளப்பை இழந்துள்ள லூவர்.,... நேரில் செல்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!

24 தை 2025 வெள்ளி 13:41 | பார்வைகள் : 3963
உலகின் மிகபெரிய அருங்காட்சியகமான லூவர், பல்வேறு சேதமடைவைச் சந்தித்துள்ளதாக அதன் இயக்குனரகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதை அடுத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேரில் செல்லவுள்ளார்.
லூவர் அருங்காட்சியகம் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும், அங்குள்ள தொழில்நுட்பட்ட இயந்திரங்கள் தேய்வடைந்துள்ளதாகவும், சில வேளைகளில் வெப்பநிலையில் உள்ள மாறுபாடுகள் காரணமாக படைப்புகளுக்கு ஆபத்து விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லூவர் அருங்காட்சியகத்துக்கு ஏற்பட்ட சேதங்கள், தேசத்துக்கான சேதமாகும் என தெரிவித்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், வரும் செவ்வாய்க்கிழமை அங்கு நேரில் செல்ல உள்ளார். இத்தகவலை எலிசே மாளிகை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
லூவரில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியிலான பிரமிட் வடிவம் 1988 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இன்றைய திகதியில் அது தனது பளபளப்பு தன்மையை இழந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு லூவருக்கு வருகை தந்த ஒன்பது மில்லியன் பார்வையாளர்களில் 80% சதவீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் எனவும், ஆனால் லூவர் சர்வதேசத்தின் மதிப்புக்கு ஈடாக இல்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.