Meudon சுரங்கத்துக்குள் தீ... - RER C தடை!!
24 தை 2025 வெள்ளி 15:52 | பார்வைகள் : 710
Meudon சுரங்கத்துக்குள் ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து, RER C தொடருந்து தடைப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து Champ-de-Mars தொடக்கம் St-Quentin-en-Yvelines நிலையங்கள் வரையும், அதேவேளை, Champ-de-Mars தொடக்கம் Versailles-Château நிலையம் வரையும் RER C சேவைகள் தடைப்பட்டுள்ளன.
Meudon இல் இருந்து Chaville வரையாக பகுதிக்குள் உள்ள சுரங்கத்துக்குள் ஏற்பட்ட தீ பரவலை அடுத்து மேற்படி சேவைகள் தடைப்பட்டுள்ளன.
வீதி போக்குவரத்துக்களும் Juvisy தொடக்கம் Dourdan வரையும், Juvisy தொடக்கம் St-Martin-d'Etampes வரையும் தடைப்பட்டுள்ளன.
சேவைகள் மாலை *4 மணியில் இருந்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.