பரிஸ் : நகரசபை கட்டிடத்தை சூழ்ந்துகொண்ட அகதிகள்! - பரபரப்பு!!
24 தை 2025 வெள்ளி 16:43 | பார்வைகள் : 6154
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் நகரசபை கட்டிடத்தை நூற்றுக்கணக்கான அகதிகள் சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜனவரி 23, நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF எனப்படும் வீடற்றவர்கள் இணைந்து பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் நகரசபை கட்டிடத்தின் (Place de l'Hôtel de Ville) முற்றத்தில் ஒன்று கூடினர். அவர்கள் 150 பேர் வரை இருந்ததாக அறிய முடிகிறது.
மாலை 7.30 மணி அளவில் இருந்து அவர்கள் அங்கு கூடியதை அடுத்து, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது.
Nuit de la solidarité நிகழ்ச்சி திட்டத்தின் எட்டாவது ஆண்டான நேற்று வியாழக்கிழமை இரவு, அவர்கள் இச்செயலில் ஈடுபட்டிருந்தனர்.


























Bons Plans
Annuaire
Scan