Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பியர்கள் அல்லாத பார்வையாளர்களை அழைக்கும் லூவர்!!

ஐரோப்பியர்கள் அல்லாத பார்வையாளர்களை அழைக்கும் லூவர்!!

25 தை 2025 சனி 07:00 | பார்வைகள் : 858


உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான லூவருக்கு சென்ற 2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 9 மில்லியன் பேர் வருகை தந்திருந்தனர். அவர்களில் 80% சதவீதனமானவர்கள் வெளிநாட்டவர்களாவர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில், ஐரோப்பியர்கள் தவிர்த்து ஏனைய நாடுகளில் இருந்து பார்வையாளர்களை லூவருக்கு வரவழைக்கும் முயற்சி ஒன்றை கலாசார அமைச்சர்  Rachida Dati மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர், நேற்று முன்தினம் ஜனவரி 23, வியாழக்கிழமை தெரிவிக்கையில், “ஐரோப்பியர்கள் தவிர்த்து உலகம் முழுவதும் இருந்து பயணிகளை நாம் கவர வேண்டும். அதற்கு நாங்கள் புதுமையாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

லூவர் அருங்காட்சியகம் தனது பொலிவை இழந்துள்ளதாகவும், உலகத்தரத்தில் இல்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதை அடுத்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரும் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று நிலமைகளை பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.