Paristamil Navigation Paristamil advert login

ஆவணமற்ற தொழிலாளர்களை இறுக்கமாக்குங்கள். உள்துறை அமைச்சர்.

ஆவணமற்ற தொழிலாளர்களை இறுக்கமாக்குங்கள். உள்துறை அமைச்சர்.

25 தை 2025 சனி 07:27 | பார்வைகள் : 2802


பிரான்சில் 2012-ம் ஆண்டு கொண்டுவரபட்ட 'Valls' சுற்றறிக்கையின்படி, கடுமையான வேலைகளில் ஈடுபடும் ஆவணமற்ற தொழிலாளர்கள், பிரான்சில் குற்றச் செயல்களில் ஈடுபடாதவராக, அதேவேளை ஒரு ஆண்டில் ஆறுமாதங்கள் வேலையில் இருந்தவராக இருக்கும் சான்றிதழ்களை விண்ணப்பித்தால் அவரை 'தொழிலாளர்களை முறைப்படுத்தும்' சட்டத்தின்படி அவர்களுக்கு வதிவிட அனுமதிப்பத்திரம் வழங்க அனுமதித்தது.

இதன்படி கடந்த 2023-ம் ஆண்டில் 34,000 ஆவணமற்ற தொழிலாளர்கள் தங்களின் வதிவிட அனுமதிப்பத்திரத்தைப் பெற்றனர், பல்லாயிரக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்கள் தங்களின் வதிவிட அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய உள்துறை அமைச்சர் Bruno Retailleau அவர்கள் 'préfets' ஆட்சியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை கடந்த வியாழன் 23/01 அன்று அனுப்பியுள்ளார் அதில் 'ஆவணமற்ற தொழிலாளர்களின் விண்ணப்பங்களை கடுமையாக ஆராயுங்கள், இறுக்கமாக்குங்கள் ஆண்டிற்கு 10,000 பேருக்கு மட்டுமே வதிவிடம் அனுமதி பத்திரத்தை வழங்குங்கள்' என தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றறிக்கை குறித்து அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சங்கமான La Cimade தனது அதிதிருப்தியை வெளியிட்டுள்ளது. குறித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் "34,000 பேரை 2023 -ல் அனுமதித்த அரசு வருங்காலத்தில் 10,000 பேராகக் குறைப்பது ஆபத்தானது ஆவணம் இல்லாதவர்களை மேலும் ஆபத்தானவர்களாக மாற்றும் விளைவுகளை ஏற்படுத்தும்" என அரசை கண்டித்துள்ளார்.