சுற்றுச்சூழல் மாசடைவைக் குறைத்த ஒலிம்பிக்!!
25 தை 2025 சனி 09:21 | பார்வைகள் : 564
சென்ற வருடம் இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியின் போது, பல்வேறு போக்குவரத்து விதிகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. போட்டிகள் தடைப்படாமல் இடம்பெறுவதற்கும், அரங்குகளுக்கு தேவையான பொருட்கள், உணவுகள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும், வீதிகளில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வீதியில் கொண்டுவந்திருந்த இந்த மாற்றம் காரணமாக சுற்றுச்சூழல் மாசு குறைவடைந்திருந்ததாக Airparif நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வீதி கட்டுப்பாட்டு நடைமுறையில் இருந்த நாட்களில் 18% சதவீதம் வாகன போக்குவரத்து குறைவடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளியில் கலந்துள்ள dioxyde d'Azote இன் அளவு 33% சதவீதம் குறைவடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுவட்ட வீதி (périphérique) இல் 12% சதவீதம் வளி மாசடைவு குறைவடைந்திருந்ததாக தெரிவ்க்கப்பட்டுள்ளது.