டெஸ்ட் வரலாற்றில் முதல் ஹாட்ரிக் எடுத்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்!
25 தை 2025 சனி 10:24 | பார்வைகள் : 155
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.
முல்தானில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்சில் துடுப்பாடியது. பாகிஸ்தானின் 38 வயது சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலியின் மிரட்டலான பந்துவீச்சில், மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
54 ஓட்டங்களுக்கு 8 விக்கெட் என மேற்கிந்திய தீவுகள் தடுமாறியபோது, கேமர் ரோச் 25 (45) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஜோமெல் வாரிக்கன் (Jomel Warrican), குடகேஷ் மோட்டி உடன் கைகோர்க்க மேற்கிந்திய தீவுகள் 100 ஓட்டங்களை கடந்தது.
அரைசதம் அடித்த மோட்டி 55 ஓட்டங்களில் அவுட் ஆக, மேற்கிந்திய தீவுகள் 163 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
நோமன் அலி (Noman Ali) 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஹாட்ரிக் எடுத்த சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.
வாசிம் அக்ரம் (1999), அப்துல் ரஸாக் (2000), முகமது சமி (2002), நசீம் ஷா (2020) ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இதற்கு முன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர்கள் ஆவர்.