Paristamil Navigation Paristamil advert login

Mémorial de la Shoah - யூதர்களோடு ஒரு வாழ்வு!!

Mémorial de la Shoah - யூதர்களோடு ஒரு வாழ்வு!!

13 பங்குனி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19964


யூத மதத்தினர் குறித்து பல சுவாரஷ்யமான தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிரான்ஸ் ஒரு மத சார்பற்ற நாடாக இருந்தாலும், பல்வேறு மதத்தினர் வாழும் நாடாக பிரான்ஸ் உள்ளது. அதில் முக்கியமான மதம் யூத மதம். 
 
யூதர்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்வதற்காகவே ஒரு அருங்காட்சியகம் பரிசின் Le Marais இல் உள்ளது. Mémorial de la Shoah எனும் அருங்காட்சியகமே அது. 
 
குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரான்சில் அதிகளவான யூதர்கள் வாழ்ந்தார்கள். இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளவையும் அவை குறித்தது தான். 
 
ஜனாதிபதி Jacques Chiracஇனால் 27 ஜனவரி மாதம் 2005 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், பல்வேறு ஓவியங்கள், காணொளிகள் பல்வேறு தடயங்கள், பொருட்கள் என யூதர்களின் வாழ்வை கண் முன்னே நிறுத்தும் படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 
 
யூதர்களின் வாழ்வு குறித்த புத்தகங்களும் இங்கு உண்டு. வாசிப்பறையும் இருப்பதால்... யூதர்கள் குறித்து பொறுமையாக வாசித்தும், புகைப்படங்களாக பார்த்தும் அறிந்துகொள்ளலாம். 
 
நாசிப்படைகள் பிரான்சில் 76,000 யூதர்களை கொன்று குவித்திருந்தது. அது குறித்த முக்கியமான தகவல்களையும், கொல்லப்பட்டவர்களின் பெயர்களையும் இங்கு பாதுகாத்து வைத்திருக்கின்றனர். 
 
யூதர்களின் முக்கிய வீரராக கருதப்பட்ட, இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட Shoah எனும் நபரின் நினைவாக இந்த பெயர் அருங்காட்சியகத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. 
 
முழுக்க முழுக்க இலவசமாக பார்வையிடக்கூடிய அருங்காட்சியகம் இது. 
Le Marais இல் Ile de la Cité இன் கிழக்கு மூலையில் உள்ளது இந்த அருங்காட்சியகம். ஓய்வு நேரத்தில் ஒருதடவை போய் வாருங்களேன்....!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்