Eowyn புயல்.... மூன்று மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை!!
25 தை 2025 சனி 10:30 | பார்வைகள் : 1476
பிரித்தானிய தீவுகளை சூறையாடிக்கொண்டிருக்கும் Eowyn புயல் காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Calvados, Ille-et-Vilaine மற்றும் Mayenne ஆகிய மூன்று மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் எனவும், கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், வேகமான காற்றுடன், பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.