Paristamil Navigation Paristamil advert login

Montigny-le-Bretonneux : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

Montigny-le-Bretonneux : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

25 தை 2025 சனி 11:44 | பார்வைகள் : 1482


Montigny-le-Bretonneux (Yvelines) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

ஜனவரி 22, புதன்கிழமை மாலை 7 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அங்குள்ள வீடொன்றில் பெண் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

65 வயதுடைய குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்ததாகவும், அவரது கணவர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் மருத்துவ விடுதி ஒன்றில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.