நேபாளத்தில் மர்ம முறையில் இந்தியர் பலி
25 தை 2025 சனி 11:49 | பார்வைகள் : 520
நேபாளத்தில் மர்மமான முறையில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
நேபாளத்தின் பரா மாவட்டத்தில் உள்ள சூரியமை கோயிலின் நிழல்குடையின் கீழ் 42 வயதான ருத்ர கிரி என்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியர் ருத்ர கிரி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த இந்தியரின் மரணம் குறித்து எவ்விதத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை, மரணத்திற்கான காரணம் இன்னும் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, நேபாள பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மரணத்தின் காரணத்தை அறிந்துகொள்வதற்கான விசாரணை தொடர்ந்துள்ளதை நேபாள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.