Paristamil Navigation Paristamil advert login

இரு பாலினங்கள் மட்டுமே.. - கருத்துக்கணிப்பில் பிரெஞ்சு மக்கள்!!

 இரு பாலினங்கள் மட்டுமே.. - கருத்துக்கணிப்பில் பிரெஞ்சு மக்கள்!!

25 தை 2025 சனி 14:22 | பார்வைகள் : 1270


அமெரிக்காவில் 'ஆண் பெண்' எனும் இரு பாலினங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என அந்நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பில் பிரெஞ்சு மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கருத்துக்கணிப்பில் பின்வரும் கேள்வி நேரடியாக கேட்கப்பட்டது. "<பாலினங்களில் இரண்டு மட்டுமே உள்ளன. பெண்பால் மற்றும் ஆண்பால் > நீங்கள் அறிக்கையுடன் உடன்படுகிறீர்களா?" என கேட்கப்பட்டது. இதற்கு பிரெஞ்சு மக்களில் பத்தில் ஏழுக்கும் அதிகமானோர் (76% சதவீதமானோர்) "ஆம்" (OUI) என கருத்து தெரிவித்துள்ளனர். 23% சதவீதமானவர்கள் "இல்லை" (NON) என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏனைய 1% சதவீதமானவர்கள் “கருத்து தெரிவிக்கவில்லை"

மேற்படி கருத்துக்கணிப்பு CNEWS, JDD மற்றும் Europe 1 ஆகிய ஊடகங்களுக்காக CSA நிறுவனம் மேற்கொண்டிருந்தது. ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த கருத்துக்கணிப்பில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் கலந்துகொண்டிருந்தனர்.