இளையராஜாவின் வேதனை..!

25 தை 2025 சனி 14:43 | பார்வைகள் : 3712
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்தாண்டு ஜனவரி 25ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டது. இதனை அடுத்து இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் ’எனது கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் எனது குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டது எனக்கு இப்போது வேதனையை தருகிறது’ என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
என் அருமை மகள் பவதாரிணி எங்களை விட்டு பிரிந்த நாள். அன்பே உருவான இந்த மகள் பிரிந்த பிறகுதான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. காரணம், எனது கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் எனது குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டது எனக்கு இப்போது வேதனையை தருகிறது.
அந்த வேதனை தான் மக்களை எல்லாம் ஆறுதல்படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் எனக்கும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. பவதாரிணி பிறந்தநாளான பிப்ரவரி 12ம் தேதி அன்று அவருடைய திதி வருகிறது. அவை இரண்டையும் சேர்த்து நினைவு நாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்று இருக்கிறோம்.
இதில், இசை கலைஞர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது மகள் பவதாரிணியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025