Paristamil Navigation Paristamil advert login

பரிசுக்குள் சிறு அமெரிக்கா!!

பரிசுக்குள் சிறு அமெரிக்கா!!

12 பங்குனி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 18741


பரிஸ் வெறுமனே பரிஸ் இல்லை! பரிசுக்குள் அமெரிக்க கலாச்சாரத்தை பறைசாற்றும் பல்வேறு தடயங்கள் உள்ளன. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அது குறித்து பார்க்கலாம்... 
 
பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் பல்லாண்டு காலமாக நெருங்கிய தொடர்பு உண்டு. எப்போதும் ஒரு பாசம் உண்டு. இதற்கு பல சான்றுகள் பரிசில் நீங்கள் காணக்கூடியதாக இருக்கும்.
 
குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதிகளின் பெயர்கள் கொண்ட வீதிகள் பரிசில் உள்ளன. 
Avenue du Président Kennedy, 
Rue Benjamin Franklin, 
Avenue Myron Herrick, 
Avenue President Franklin Delano இந்த தெருக்கள் எல்லாம் பரிசில் தான் உள்ளன. 
 
இவை தவிர அமெரிக்க எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் வேறு இன்ன பிற கலைஞர்களின் பெயர்களை கொண்ட தெருக்களும் உண்டு. 
 
அமெரிக்க கண்டுபிடிப்பாளர்களையும் விட்டு வைக்கவில்லை நம்மாட்கள். Josephine Baker, George Gershwin, Ernest Hemingway, Thomas Edison, மற்றும் George Eastman போன்ற கண்டுப்பிடிப்பாளர்கள், மேதைகளின் பெயர்களையும் பிரெஞ்சு வீதிகளுக்கு சூட்டி அழகு பார்த்துள்ளது பரிஸ். 
 
பிரான்சில் 'அமெரிக்க தேசபக்தி அமைப்பு' முதன் முதலாக 1783 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
 
பதினாறாம் வட்டாரத்தில் உள்ள Place d’Iéna கட்டிடத்துக்கு முன்பாக, அமெரிக்க ஜனாதிபதி  George Washington இன் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஒருதடவை கூட பரிசில் கால் பதிக்கவில்லை.  
 
அமெரிக்க ஜனாதிபதி ஃபெஞ்சமின் ப்ராங்க்ளின் சிலை, Square de Yorktown இல் உள்ளது. அதன் அருகிலேயே Rue Benjamin Franklin உம் உள்ளது. 
 
இதென்ன பிரம்மாதம் எனும் சொல்லும்படியாக 1814 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேவாலயம் பரிசில் கட்டப்பட்டது. இன்று வரை ஆங்கிலத்தில் தான் வழிபாடுகள் இடம்பெறுகிறது. (21 rue de Berri. Paris) 
 
நாம் எப்போதும் அமெரிக்கர்களுடன் நண்பர்களே என பிரெஞ்சு தேசம் உறுதிப்படுத்திக்கொண்டே உள்ளது!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்