■■ கத்திக்குத்துக்கு இலக்காகி சிறுவன் பலி.. பரிசில் அதிர்ச்சி சம்பவம்!!
25 தை 2025 சனி 15:49 | பார்வைகள் : 5565
14 வயதுடைய சிறுவன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
ஜனவரி 24, நேற்று வெள்ளிக்கிழமை இரவு இத்தாக்குதல் சம்பவம் இரவு 8 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. உதைபந்தாட்ட பயிற்சியினை முடித்துக்கொண்டு stade Jules-Noël மைதானத்தில் இருந்து (பரிஸ் , 14 ஆம் வட்டாரம்) வெளியேறிய 14 வயதுடைய சிறுவன், கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.
கடந்த டிசம்பரில் தெற்கு பரிசில் அப்பாஸ் எனும் சிறுவன் இதேபோன்று கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan