இரட்டைக் கொலை... சந்தேக நபர் கைது!!
25 தை 2025 சனி 18:28 | பார்வைகள் : 7123
பிரான்சின் வடமேற்கு எல்லை மாவட்டமான Calvados இல் இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதிகள் இருவர் கொல்லப்பட்ட நிலையில், சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜனவரி 23, வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Saint-Martin-aux-Chartrains (Calvados) நகரில் இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் தம்பதிகள் இருவர், கடந்த புதன்கிழமை அன்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மறுநாள் வியாழக்கிழமை இரவு அவர்களது வீடு அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அப்பகுதி காவல்துறையினர், வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட இருவரது முகத்திலும், உடலின் பிற பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், அவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலங்கள் உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan