OQTF சட்டத்துக்கு எதிராக விமானநிலையத்தில் பிரச்சாரம்!!

25 தை 2025 சனி 18:45 | பார்வைகள் : 12757
புகலிட கோரிக்கையை முன்வைத்திருக்கும் அகதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை நாட்டை விட்டு வெளியேற பணிக்கும் “OQTF - Obligation de Quitter le Territoire Français) சட்டத்தினை எதிர்த்து, பரிஸ் சாள்-து-கோல் விமான நிலையத்தில் பிரச்சாரம் ஒன்று இடம்பெற்றது.
குடியேற்றத்துக்கு ஆதரவான அமைப்பினரே இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் வைத்து பயணிகளிடன் துண்டு பிரசுரங்கள் வழங்கி Obligation de Quitter le Territoire Français சட்டம் தொடர்பில் விளக்கமளித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அனுமதி பெறாமல் இந்த பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாட்டின் சட்டம் ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலோ, பிரச்சாரத்திலோ ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மேற்படி செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025