Paristamil Navigation Paristamil advert login

"பிரான்சில் ஆண்மைத்துவம் வலுப்பெறுகிறது"Yseline Fourtic-Dutarde.

25 தை 2025 சனி 18:54 | பார்வைகள் : 2461


பிரான்சில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஜனவரி 25-ம் திகதியை பாலினத்திற்கு எதிரான தேசிய நாளாக 'உயர் சமத்துவ கவுன்சில்' (HCE) எனும் அமைப்பு நினைவுகூர்ந்து வருகிறது. அதன்படி இவ்வாண்டு வெளியான அவர்களின் அறிக்கையில் "இந்த அமைப்பை நிறைய ஆண்கள் இது அவர்களின் சலுகைகளைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சீர்குலைக்கும் நிறுவனம் என்று கருதுகின்றனர்" என குறிப்பிடப்படுகிறது மேலும் "வேலை உலகில், தெருவில், போக்குவரத்தில், அரசியல் உலகில், குடும்ப வாழ்க்கையில், ஊடகங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நடத்தப்படும் சமத்துவமின்மைகள் இன்னும் தொடர்கிறது". எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வேலைசெய்யும் பெண்களில் 61% சதவீத பெண்கள் ஆண்களை விடவும் குறைவான சம்பளத்தை பெறுகின்றனர், ஆண்டொன்றுக்கு உஊதியத்தின் அளவைப் பார்த்தால் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒருமாதம் ஊதியம் இன்றி இலவசமாகவே பணிபுரிகின்றனர் ஒட்டுமொத்தத்தில் பிரான்சில் ஆண்மைத்துவம் வலுப்பெறுகிறது" என  உயர் சமத்துவ கவுன்சில்' (HCE) இன் இணைத் தலைவர் Yseline Fourtic-Dutarde ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவத்திற்கான உயர் கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, '15 முதல் 24 வயதுடைய பெண்களில் 94% சதவீதம் பேர் இன்று ஆணாக இருப்பதை விட பெண்ணாக இருப்பது மிகவும் கடினம் என்று நம்புகிறார்கள்' எனவும் கோடிட்டுக் காட்டுகிறது.