Paristamil Navigation Paristamil advert login

சிறுவன் கொலை... பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு சிறுவர்கள் கைது!!

சிறுவன் கொலை... பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு சிறுவர்கள் கைது!!

26 தை 2025 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 4018


பரிசில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டமை அறிந்ததே. இச்சம்பவம் தொடர்பில் தற்போது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சிறுவன் கொள்ளையிடப்படதாகவும், அவனது தொலைபேசியை கொள்ளையிடுவதற்காக இரு சிறுவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் மேற்கொண்ட 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் பிறந்த இரு சிறுவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இதேபோன்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக சென்ற 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் வசிப்பதாகவும், பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்