Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ள 'பறவாதி' இன்று திரையரங்கில்.

பிரான்சில் அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ள 'பறவாதி' இன்று திரையரங்கில்.

26 தை 2025 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 2203


இலங்கை தீவின் வரைபடத்தில் வரவு வைக்கப்படாத, கிழக்கு மாகாணத்தில் உள்ள, வரண்டு போன ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வியலை, தலைமுடியில் இருந்து பாதம் வரை காய்ந்து காட்சி தரும் அவர்களின் அன்றாட காட்சிகளை அலங்காரங்கள் இல்லாமல், சொல்லும் ஒரு காவியம் 'பறவாதி'

பிரான்சில் இருந்து சென்று அந்த தணல் தளத்தை, அந்த சுடுமண்ணில் வாழும் மக்களை கமேறாவுக்குள் உள்வாங்கி திரையில் உமிழும் உயர்ந்த உருவாக்கம் 'பறவாதி' முழுக்க முழுக்க 100% எங்கள் திரைத்துறை கலைசார்ந்து கற்றுத் தேறிய கலைஞர்களின் கைவினை 'பறவாதி'.

கடந்த சில வாரங்களாக தமிழர் சமூகவலைத்தளங்களில் காட்சிகளாக, செவ்விகளாக, விளம்பரங்களாக, கருத்துக்களாக "எல்லோரும் வாருங்கள் திரையரங்குக்கு 'பறவாதி' பார்க்க" எனும் அழைப்பாக, நிறைந்து நிற்கும் 'பறவாதி' தமிழர் மத்தியில் மிகப்பெரிய ஆவலைத் தோற்றுவித்துள்ளது. 

இதுபற்றி நாம் அறிந்த வரை இன்று 26/01 மாலை ஐந்து முப்பது மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியான Villeneuve la Garenne திரையரங்கில்  முதல் காட்சி திரையிடப்படுகிறது.

"எங்கட ஊர் 
எங்கட கதை 
எங்கட சனம் 
எங்கட பொடியள் 
செய்த படம் - பறவாதி" 

900 இருக்கைகள் கொண்ட 
திரையரங்கில் முதல் காட்சி . 26/01/2025 அன்று 17h 30 க்கு .
megarama  (44 Avenue de la Longue Bertrane, 92390 Villeneuve la Garenne - RER -C -Bus-
137 - 166 - 177 - 178 - 261
Tram- T1)