Paristamil Navigation Paristamil advert login

நுழைவுச் சீட்டு மோசடிக்குள் சிக்கியது musée d’Orsay!!

நுழைவுச் சீட்டு மோசடிக்குள் சிக்கியது musée d’Orsay!!

26 தை 2025 ஞாயிறு 09:04 | பார்வைகள் : 9801


இணையம் வழியாக நுழைவுச் சிட்டைகள் முன்பதிவு செய்வதில் musée d’Orsay அருங்காட்சியகம் மோசடிக்குள் சிக்கியுள்ளது.

musée d’Orsay அருங்காட்சியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று அச்சு அசலாக தோன்றிய போலி இணையத்தளம் ஒன்றினை நம்பி பார்வையாளர்கள் ஏமாந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை இந்த இணையத்தளம் தோன்றியது. அதனை சந்தேகப்படாமல் பலர் தங்களது வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தி நுழைவுச் சிட்டைகளை பெற முற்பட்டுள்ளனர்.

பின்னர் பலர் புகார் அளித்ததை அடுத்து, குறித்த தளம் போலி என அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டது.

**
www. billetterie.musee-orsay. fr and www. musee-orsay. fr ஆகிய இரு இணையதளங்கள் ஊடாக மட்டுமே நுழைவுச் சிட்டைகளை முன்பதிவு செய்ய முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

musée d’Orsay அருங்காட்சியகம் புகார் அளித்துள்ளது. போலி தளம் முடக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்