Paristamil Navigation Paristamil advert login

மருத்துவச் செலவீனங்கள் அதிகரிப்பு!!

மருத்துவச் செலவீனங்கள் அதிகரிப்பு!!

26 தை 2025 ஞாயிறு 09:32 | பார்வைகள் : 3636


கடந்த டிசம்பரில் முடிவு செய்தபடி மருத்துவச் செலவீனங்கள் அதிகிரித்துள்ளது. இதனை பிரான்சின் தேசிய சமூக மருத்துவக் காப்பீடான Assurance maladie - Securite social தனது மாதாந்த இதழில் உறுதி செய்துள்ளது.

இதில் முதற்பகுதியாக குடும்ப மருத்துவரிடம் (médecin traitant) சென்றால் அவரிற்குச் செலுத்தும் கட்டணம் வானைத் தொடுமளவிற்கு அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் 21€ களாக இருந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டு 26€50 ஆக இருந்தது.

இந்தக் கட்டணம் தற்போது மீண்டும் அதிகரிக்கப்பட்டு 30€ ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தாண்டி, நிபுணத்துவ மருத்துவரிடம் சென்றால் (குழந்தைப்பேறு, கண், பல், தோல்வியாதி, உளவியல் மற்றும் ஏனைய..) வழமையாக அவர்கள் பெறும் அதிகத் தொகைக் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் தங்களது மருத்துவ நிலையங்களை மீள் நிர்மானம் செய்வதற்கு இந்தக் கட்டண அதற்கு உதவும் என பிரான்சின் தேசிய சமூக மருத்துவக் காப்பீடு தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்