Paristamil Navigation Paristamil advert login

ஹேர்மீனியா புயல் - மக்களை வெளியேற்றும் அவசரசேவை!!

ஹேர்மீனியா புயல் - மக்களை வெளியேற்றும் அவசரசேவை!!

26 தை 2025 ஞாயிறு 10:05 | பார்வைகள் : 6123


கடுமையான ஹேர்மீனியா புயலினாலும் (TEMPÊTE HERMINIA) கடும் மழையினாலும், ஆறு, குளம், நதி என அனைத்திலும் நீர்மட்டங்கள் அதிகரித்து பல மாவட்டங்கள் அதியுச்ச எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இதன் உச்சமாக பிரெத்தோனின் canal d'Ille-et-Rance நீர்மட்டம்  அதியுச்சமாக உயர்ந்து வாகனங்கள் பொருட்கள் பல நீரினால் அடித்துச் செல்லப்படுகின்றது.

இதனால் ரென் (REnnes) நகரத்தின் பல பகுதி மக்கள் அவசர சேவைகளினால் பாதுகாப்பாக வெளியற்றப்படுகின்றார்கள்.
மாகாணத்தின் துறைசார் மத்திய செயற்பாட்டு மையம் (Centre opérationnel départemental de la Préfecture)  இந்த முடிவை எடுத்து உடனடியாகச் செயற்பட்டு வருகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்