Paristamil Navigation Paristamil advert login

63 ஆம் இலக்க பேரூந்தில் ஒரு அட்டகாசமான சுற்றுலா!!

63 ஆம் இலக்க பேரூந்தில் ஒரு அட்டகாசமான சுற்றுலா!!

10 பங்குனி 2018 சனி 10:30 | பார்வைகள் : 18349


பரிசுக்குள் இடங்களை சுற்றிப்பார்க்க மிக பொருத்தமான பயணம்... பேரூந்து பயணம் தான். இன்று பரிசுக்குள் இருக்கும் மிக முக்கியமான பகுதிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க உள்ளோம்... அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்... ஒரு நாள் பேரூந்து 'பாஸ்' எடுத்துக்கொண்டு, Porte de la Muette இல் இருந்து 63 ஆம் இலக்க பேரூந்தில் ஏறுவது தான். 
 
முதலாவது நிறுத்தம் ஏழாம் வட்டாரத்தில் உள்ள Bosquet-Rapp. இங்கு இறங்கினால் நீங்க Pont de l’Alma வை பார்க்கலாம். சென் நதியின் நீர்மட்டத்தை அளவிடும் Zouave சிலையை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும். ரோமன் காலத்தில் இருந்து தற்போதைய காலம் வரை பல வரலாறுகளை சேமித்து வைக்கும் Musée des Egouts அருங்காட்சியகத்துக்கும் ஒரு 'மினி'  விஸிட் அடித்துவிட்டு வரலாம். 
 
தொடர்ந்து, அடுத்த 63 ஆம் இலக்க பேரூந்தில் ஏறினால், நேரே 16 ஆம் வட்டாரத்தில் உள்ள Alma-Marceau நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளுங்கள்.  Galliera Fashion Museum, Palais de Tokyo, Paris Modern Art Museum என எண்ணற்ற பல சமாச்சாரங்கள் இங்கு அருகருகே கொட்டிக்கிடக்கின்றன. இங்குள்ள ஒவ்வொரு அருங்காட்சியங்களுக்கும் செல்வது அவசியம். அதை தவிர இங்குள்ள புராதன Givenchy, Yves Saint Laurent மற்றும் Balenciaga கட்டிடங்கள் மிக நேர்த்தியாக கட்டப்பட்ட அழழகான கட்டிடங்கள் அவசியம் பார்க்கவேண்டும். 
 
அப்படியே மீண்டும் அதே பேரூந்தில் ஏறி  Iéna நிறுத்தத்தில் இறங்கினால் Guimet Museum of Asian Art அருங்காட்சியகம் உண்டு. நீங்கள் இங்கு அவசியம் செல்லவேண்டும். இலங்கை இந்திய கலாச்சார பொருட்கள் மற்றும் ஆசியாவின் அனைத்து பொக்கிஷங்களும் இங்கு உண்டு. 
 
காளி சிலை, அம்மன் சிலை தமிழ் கடவுகளும்.. சுளகு, அம்மி குளவி என தமிழர் கருவிகளையும் இங்கு பார்த்து 'அட' என உச்சுக்கொட்டிக்கொண்டு மீண்டும் பேரூந்தில் ஏறுங்கள்...
 
அதே வட்டாரத்தில் உள்ள Albert de Mun நிறுத்தத்தில் இறங்கினால்.. 1867 ஆம் ஆண்டு  கட்டபட்ட Aquarium de Paris ஐ காணலாம்.. பத்தாயிரம்  விதம் விதமான மீன்கள் இங்கு மிதக்கின்றன. சுறா... ஜெல்லி மீன்கள்.. உட்பட ஒக்டபஸ் கூட இங்கு உண்டு. 
 
நேரத்தை மிச்சப்படுத்திக்கொண்டு மீண்டும் பேரூந்தில் ஏறினால் - அடுத்த நிறுத்தம் Trocadéro. 
 
இங்கு பார்ப்பதற்கு எண்ணற்ற விஷயங்கள் உண்டு. Palais de Chaillot, Cité de l’Architecture et du Patrimoine, Musée de l’Homme, Musée National de la Marine, Trocadéro Gardens என பல பொக்கிஷங்கள் உண்டு. எங்கு செல்வது என்பது உங்கள் விருப்பம். இங்குள்ள அருங்காட்சியங்களை தனித்தனியாக பார்க்கவே ஒரு நாள் வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்