கனடாவில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை தேடும் பொலிசார்
26 தை 2025 ஞாயிறு 11:21 | பார்வைகள் : 6783
கனடாவில் காப்ரோ மால் பகுதியில் நேற்றைய தினம் இரவு கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவருக்கு உயர் ஆபத்து கிடையாது என போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சந்தேக நபர்கள் பற்றிய எவ்விதமான தகவல்களும் தற்போதைக்கு கிடையாது என டொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan