Paristamil Navigation Paristamil advert login

புதிதாக 15000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக்கொண்ட ஹமாஸ்

புதிதாக 15000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக்கொண்ட ஹமாஸ்

26 தை 2025 ஞாயிறு 12:26 | பார்வைகள் : 9328


ஹமாஸ் அமைப்புடனான போர் தொடங்கி 15 மாதங்களுக்கு பின் போர் நிறுத்தப்பட்டுள்ளது.

  இஸ்ரேலுடனான போர் ஆரம்பித்த பின்னர் பாலஸ்தீனிய போராளி அமைப்பான ஹமாஸ் புதிதாக 15000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக்கொண்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் ஈரான் ஆதரவு அமைப்பு இஸ்ரேலிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக விளங்கலாம் என அமெரிக்க புலனாய்வு பிரிவுகள் தெரிவித்துள்ளன.

இதேயளவு - 15000 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுடனான மோதலின் போது கொல்லப்பட்டனர் என அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜோபைடன் நிர்வாகத்தின் இறுதிநாட்டிகளில் கிடைத்த தகவல்கள் உட்பட பல தகவல்கள் குறித்துஅமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் காங்கிரஸிற்கு பல தகவல்களை வழங்கியுள்ளன.


ஹமாஸ் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதில் வெற்றிபெற்றுள்ளது புதிதாக இணைக்கப்பட்டவர்களில் பலர் இளையவர்கள், என தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் புதியவர்களிற்கு இன்னமும் பயிற்சிகள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


அமெரிக்காவின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் அலுவலகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

காசாவில் தான் இழந்த அதேயளவு உறுப்பினர்களை ஹமாஸ் மீண்டும் சேர்த்துக்கொண்டுள்ளது என அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் ஜனவரி 14ம் திகதி தெரிவித்திருந்தார்.

இது நீடித்த கிளர்ச்சி நிரந்தர போரை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை பூர்த்தி செய்த பின்னர் படைகளை மீளபெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,ஹமாஸ் மீள் எழுச்சி பெறுகின்றது பூர்த்தி செய்வதற்கு வேறு எந்த வெற்றிடமும் இல்லாததே இதற்கு காரணம் என அன்டனி பிளிங்கென் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்