Paristamil Navigation Paristamil advert login

வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணையா? சீமான் எதிர்ப்பு

வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணையா? சீமான் எதிர்ப்பு

26 தை 2025 ஞாயிறு 13:11 | பார்வைகள் : 347


வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை,'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

புதுக்கோட்டையில் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:சமூகத்தை சீரழித்தவர் ஈ.வெ.ரா.,. இது ஈ.வெ.ரா., மண் என போசாதீர்கள். இது என் மண். தமிழ் மண். இது எங்களுக்கு ஈ.வெ.ரா., மண் இல்லை.

சட்டம் ஒழுங்கு நல்லாட்சி நடக்கிறது என சொல்கிறார். மணல் கொள்ளை தடுக்க ஜெகபர் அலி போராடி உள்ளார். எஸ்பி.,யிடம் பல முறை புகார் அளித்துள்ளார். எடுத்த நடவடிக்கை என்ன. ஒன்றும் கிடையாது. அவரை, ஒருவன் ஏற்றி கொன்று விட்டு மறுபடி செத்துவிட்டாரா இல்லையா என உறுதி செய்வதற்கு மறுமுறை ஏற்றினான் என்றால், அவன் மனநிலை என்ன. எவ்வளவு கொடூர மன நிலை ஒரு கொள்ளையனுக்கு, கொலைகாரனுக்கு இவ்வளவு துணிவு எப்படி வந்தது. இந்த சட்டம் அவனை பாதுகாக்கிறது. இந்த சட்டம் கொடுக்கிற திமிர். கேட்டால் நல்லாட்சி கொடுக்கிறேன் என்பீர்கள்.

ஈழத் தமிழர்களை கொன்ற விவகாரத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்த உங்களை உலக தமிழ் மக்கள் மன்னித்தால், என்னை மன்னிக்க மாட்டார்களா? உங்களைப் பார்த்து நான் பதற்றம் அடைகிறேனா? என்னை பார்த்து நீங்கள் பதற்றம் அடைகிறீர்களா? பதற்றம் அடைகிறார் சீமான் எனக்கூறியவர்களுக்கு இந்த பதிலை கூறுகிறேன்

நான் யாரிடமாவது ஆதரவு கேட்டேனா? எனது சின்னத்தை பறித்து என்னை நிர்கதியாக நிற்க வைத்த போது எனக்கு ஆதரவாக வந்தீர்களா?

வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. மாநில போலீஸ்துறையை உளவுத்துறையை குறைத்துவிட்டு சி.பி.ஐ., விசாரணை கேட்பது மாநில தன்னாட்சிக்கு நேர் எதிரானது.மறு விசாரணை வேண்டுமானால் கேட்கலாம். சி.பிஐ, விசாரித்து எந்த குற்றத்திற்கு தண்டனை பெற்றுத் தந்தது. அது ஏமாற்று வேலை. மறு விசாரணை நடத்தி தீர விசாரிக்க வேணடும்.செல்போன் திருடரை ஆடியோ வெளியீட்டாளரை உயர் அதிகாரியாக வைத்துள்ளீர்கள்.இந்த ஆடியோ எப்படி வெளியானது. இது தான் அரசின் வேலையா?

தற்போது பெரியவர்களுக்குள் சண்டை நடக்கிறது. விஜயை இப்போது ஏன் இழுக்கிறீர்கள்? மெயின் ரவுடிகள் மோதும் போது விஜயை ஏன் இழுக்கிறீர்கள்? இவ்வாறு சீமான் கூறினார்.