பரிசில் இலவசமாய் இரண்டு அருங்காட்சியகம்! !
9 பங்குனி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18353
பரிசுக்குள் விடுமுறையை கழிக்க எங்கு சென்றாலும் சில பல யூரோக்கள் தின்று ஏப்பம் விடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பரிசுக்குள் இருக்கும் இரண்டு இலவச அருங்காட்சியகங்கள் குறித்து பார்க்கலாம்.. !!
Musée du Général Leclerc de Hauteclocque et de la Libération de Paris மற்றும் Musée Jean Moulin ஆகிய இரு அருங்காட்சியகங்களும், பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ளது. பெரும் ஆடம்பரங்கள் கொண்ட நவீன அருங்காட்சியகங்கள் இவை இல்லை என்ற போதும், இரண்டாம் உலகப்போர் குறித்து அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் என்றால் இந்த அருங்காட்கியங்கள் 'பெஸ்ட் சொய்ஸ்!'
திங்கட்கிழமைகளை தவிர மீதி அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் இவ்விரு அருங்காட்கியங்களும் சில முக்கிய ஆவணங்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ளது. போர் கால ஆயுதங்கள், புகைப்படங்கள், சிதைந்த சில பொருட்கள் என இரண்டாம் உலக யுத்தத்தினை கண்முன்னே கொண்டுவருகிறது.
தவிர, நாசி படைகளின் ஊடுருவல், பிரெஞ்சு இராணுவ மேற்கொண்ட முன்னெடுப்புக்கள், அழிந்துபோன சில கலாச்சார பண்டைய பொருட்கள் எனவும் இங்கு பார்வைக்கு உள்ளது.
ஆரம்பித்த காலத்தில் இருந்து கட்டணம் அறவிடப்பட்டாலும், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அருங்காட்சியகம் இலவசமாக்கபட்டுள்ளது. அங்கிருப்பவர்களின் உதவி தேவைப்பட்டால் மாத்திரம் அதற்கு £5 செலுத்தவேண்டும்.
வரும் 2019 ஆம் ஆண்டு முதல் இந்த அருங்காட்கியகங்கள் 14 ஆம் வட்டாரத்துக்கு மாற்றப்பட உள்ளது.
அது சரி...., Marshal Leclerc மற்றும் Jean Moulin எனும் இரு பெயர்கள் யாருடையது என நீங்கள் கேட்பது புரிகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது எதிரிகளை எதிர்த்து போரிட்ட இரு சாதாரண பரிஸ் வாழ் நபர்களின் பெயர்களே அது.
எங்க இருக்கு? : 23 Allée de la 2ème Division Blindée, 75015 Paris
திறக்குற நேரம் என்ன? : காலைல 10 ல இருந்து மாலை 6 மணி!
தொலைபேசி நம்பர் எதாச்சும் இருக்கா? : இருக்கே... +33 1 40 64 39 44
ஆச்சரியம் தான் இல்லையா... ஒரு தடவை சென்று பாருங்கள் இன்னும் ஆச்சரியங்கள் காத்துக்கிடக்கின்றன...!!