Paristamil Navigation Paristamil advert login

தலையின் பின்புறத்தில் முட்டி கோல் அடித்த வீரர்

தலையின் பின்புறத்தில் முட்டி கோல் அடித்த வீரர்

26 தை 2025 ஞாயிறு 14:01 | பார்வைகள் : 136


பண்டஸ்லிகா போட்டியில் பயார்ன் முனிச் அணி 2-1 என்ற கணக்கில் பிரெய்பர்க் அணியை வீழ்த்தியது. 

ஜேர்மனியின் கிளப் தொடரான பண்டஸ்லிகாவின் நேற்றையப் போட்டியில் பயார்ன் முனிச் (Bayern Munich) மற்றும் எஸ்சி பிரெய்பர்க் (SC Freiburg) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பாயர்ன் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் (Harry Kane) அசத்தலாக கோல் அடித்தார். 

சக அணி வீரர் பாஸ் செய்த பந்தை லாவகமாக வாங்கிய ஹாரி, கோல் வலையை நோக்கி துல்லியாக ஷாட் அடித்து கோல் ஆக மாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பாயர்ன் அணியின் சில கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஆனாலும், 54வது நிமிடத்தில் பாயர்ன் அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது.

கிம்மிக் (Kimmich) கிக் செய்த பந்தை சக அணி வீரர் கிம் மின் ஜே உயர தாவி பின் தலையால் முட்டி வலைக்குள் தள்ளினார். 

அதன் பின்னர் 68வது நிமிடத்தில் மாதியஸ் கின்டர் (Matthias Ginter) கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார். 

அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பாயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எஸ்சி பிரெய்பர்க் அணியை வீழ்த்தியது.