கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ஆராய்ச்சியாளர் திடீர் மரணம்

26 தை 2025 ஞாயிறு 14:35 | பார்வைகள் : 2689
யாழ்ப்பாணத்தில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 13 ஆம் திகதி கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார். இவர் கனடா பல்கலைக்கழகத்தில் ஒரு விவசாய ஆராய்ச்சியாளராக உள்ளார்.
நேற்று பல்கலைக்கழக விரிவுரியாளருடன் ஸூம் தொழில்நுட்பமூடாக ஆராய்ச்சி குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார். இதன்போது திடீரென மயங்கி கீழே வீழ்ந்தார்.
இந்நிலையில் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.