காலி சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் மோதல் - நால்வர் காயம்
26 தை 2025 ஞாயிறு 16:08 | பார்வைகள் : 286
காலி சிறைச்சாலையில் இன்று பிற்பகல் இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கிட்டத்தட்ட நான்கு கைதிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த கைதிகள் சிகிச்சைக்காக காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளுக்கிடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.