டி20 கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை படைத்த திலக் வர்மா
26 தை 2025 ஞாயிறு 16:23 | பார்வைகள் : 148
இங்கிலாந்திற்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா அரிய சாதனை படைத்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2வது டி20 போட்டியில், இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
முதலில் ஆடிய இங்கிலாந்து 165 ஓட்டங்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் (Jos Buttler) 45 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய இந்திய அணி 19.2 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி வரை அதிரடியில் மிரட்டிய திலக் வர்மா (Tilak Varma), ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியான போட்டிகளில் விக்கெட்டை இழக்காமல், அதிக ஓட்டங்கள் விளாசியவர்கள் பட்டியலில் திலக் வர்மா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அவர் கடந்த 4 போட்டிகளில் 318 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மார்க் சாப்மன் (271) உள்ளார்.