நாட்டைத் தாக்கும் புதிய புயல்.. எட்டு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
26 தை 2025 ஞாயிறு 18:19 | பார்வைகள் : 1587
Éowyn புயலை அடுத்து, இன்று ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை நாட்டினை புதிய புயல் தாக்க உள்ளது. Herminia என பெயரிடப்பட்ட இந்த புயலை அடுத்து, எட்டு மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 69 மாவட்டங்களுக்கும் இந்த மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேற்கு பிரான்சில் இந்த Herminia புயல் இன்று தாக்க உள்ளதால், அங்கு போக்குவரத்து சேவைகள் தடைப்படுவதாக SNCF அறிவித்துள்ளது. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புயலில் சிக்கி 73 வயதுடைய ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், அவர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.