பிரான்சின் வானில் இஸ்ரேலிற்கு அனுமதி!
26 தை 2025 ஞாயிறு 23:03 | பார்வைகள் : 1502
லூபூர்ஜே வான்தளத்தின் அருகில் நடைபெறும் போர் விமானங்கள், வான் ஆயுதங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களிற்கான, இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நிகழும் கண்காட்சியின் (SALON AÉRIEN DU BOURGET) 55 வது கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்தக் கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்களின் விமானங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கு பெறும் அனுமதியினை எமானுவல் மக்ரோன் வழங்கி உள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யேகூ மற்றும் எமானுவல் மக்ரோன் நேற்று நடாத்திய பேச்சுவார்த்தைகளின் இறுதியில் பிரான்ஸ் தங்களிற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் தெரிவிவித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் இராணுவக் கண்காட்சியான மற்றும் விற்பனை நிகழ்வான Eurosatory இற்கு இஸ்ரேல் பங்குபெற பிரான்ஸ் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.