Paristamil Navigation Paristamil advert login

மதம் பெயரில் நடக்கும் அட்டூழியங்கள்: மோகன் பகவத் பேச்சு

மதம் பெயரில் நடக்கும் அட்டூழியங்கள்: மோகன் பகவத் பேச்சு

23 மார்கழி 2024 திங்கள் 02:50 | பார்வைகள் : 177


உலகில் மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளும், அட்டூழியங்களும், மதம் பற்றிய தவறான புரிதல்களால்தான் நடந்துள்ளது,'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மதம் குறித்த தவறான புரிதலால் உலகில் அட்டூழியம் நடந்து வருகின்றன. மதத்தை சரியாக விளக்கும் சமுதாயம் அவசியம். மதம் முக்கியமானது. அதனை முறையாக கற்பிக்க வேண்டும். மதத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால், மதத்தை பற்றிய பாதி அறிவு அதர்மத்திற்கு வழிவகுக்கும். மதத்தை பற்றிய முழுமையற்ற மற்றும் முறையற்ற அறிவு அதர்மத்தை நோக்கிச் செல்லும்.

உலகில் மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளும், அட்டூழியங்களும், மதம் பற்றிய தவறான புரிதல்களால்தான் நடந்துள்ளது. இதனால் சமுதாயம் மதத்தை பற்றி விளக்கம் அளிக்கும் வேலையைச் செய்ய வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்