Paristamil Navigation Paristamil advert login

மூன்று வாரமாக போர் நிறுத்தம்.. பிரெஞ்சு இராணுவத்தினர் தயார் நிலையில்...!!

மூன்று வாரமாக போர் நிறுத்தம்.. பிரெஞ்சு இராணுவத்தினர் தயார் நிலையில்...!!

23 மார்கழி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 4144


லெபனானின் தெற்கு பகுதியில் பிரெஞ்சு இராணுவத்தினர் போர் நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு இடைக்கால போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய இராணுவத்தினரின் ஒரு அங்கமாக 600 பிரெஞ்சு இராணுவத்தினர் லெபனானில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கடந்த மூன்று வாரமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் காரணமாக அவர்கள் எல்லை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்நேரமும் அங்கு மீண்டும் தாக்குதல்கள் தொடங்கலாம் எனும் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் பிரெஞ்சு இராணுவத்தினர் எந்நேரமும் தயார்  நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அவர்கள் போக்குவரத்து பாதுகாப்பினை சரிசெய்வது, கண்ணிவெடிகளை அகற்றுவது, பொதுமக்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. லெபனான் எல்லைகளின் பிரெஞ்சு இராணுவத்தினர் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்