உங்க வாழ்க்கை துணையிடம் உள்ள இடைவெளி அதிகமாகிறதா... ஏன்...?
23 மார்கழி 2024 திங்கள் 04:13 | பார்வைகள் : 145
பொதுவாக ஒவ்வொரு புதுமணத் தம்பதிகளும் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக காதலாக இருப்பார்கள். பின்னர், இருவருக்குள்ளும் படிப்படியாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பிக்கும்.. அதன் மூலம் இருவருக்குள்ளும் சண்டைகள் வரக்கூடம்..
எந்த விஷயத்திலும் உங்கள் மனைவியின் நம்பிக்கையை இழந்தால், உங்கள் திருமணத்தில் இடைவெளி அதிகரிக்கும். அதனால் அவரது நம்பிக்கைக்கு உரியவராக இருங்கள்.. மேலும் உங்க மனைவி ஏன் உங்கள் மீது உள்ள நம்பிக்கையை இழக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்.
உங்கள் மனைவியிடம் அன்பை அதிகமாக காட்டுங்கள்.. அவருக்காக நேரம் ஒதுக்குங்கள், அவளுடன் நெருக்கமாக இருங்கள். அவள் தன் எண்ணங்களை சரியான திசையில் வைக்க முயற்சிக்க வேண்டும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.. அதில் மிக முக்கியமானது உங்கள் மனைவி உங்களை சந்தேகிக்காமல் நம்ப வைக்க முயற்சிக்க வேண்டும். அவளுடைய நம்பிக்கையைப் பெற, முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதற்கு இண்டஹ் விஷயங்களை நீங்கள் ஃபாலோ பண்ன வேண்டும்.. அது என்னென்ன விஷயம்? என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
வாழ்க்கையில் சில நேரங்களில் நமது மனம் நல்ல நண்பனைத் தேடும். நம் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இக்கட்டான சூழ்நிலைகளில் நண்பர்கள் துணையாக நின்று நமக்கு உதவி செய்கின்றனர்.. மனதின் ஆழத்தைப் புரிந்துகொண்டு ஒவ்வொரு அடியிலும் துணை நிற்கிறார்கள். இந்நிலையில் அந்த நண்பன் துணையின் வடிவில் கிடைத்தால் இன்னும் எவ்வளவு சூப்பராக இருக்கும்.. ஆம் நீங்கள் உங்க மனைவிக்கு நல்ல நண்பராக இருக்க ட்ரை பண்ணுங்கள்..
நல்ல மனைவிக்கு நல்ல கணவன் துணையாக இருந்தால், அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்காது. அவர்கள் இருவருக்குள்ளும் பரஸ்பர முடிவுகளும் ஆலோசனைகளும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மனைவியின் தேவைகளை அறிந்து கொள்ளுங்கள்.. பல கணவர்கள் சிந்தனையின் அடிப்படையில் மனைவியுடன் எந்த உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளாமல் 'கணவன்'களாக வாழ்கிறார்கள். சில கணவர்களுக்கு மனைவியின் உடல்நிலை மற்றும் அது தொடர்பான விஷயங்கள் எதுவும் தெரியாது. மனைவி கருவுற்றால் கணவன் தன் உலகத்தில் மூழ்கிவிடுகிறான்.
ஜாக்கிரதையாக இருக்குமாறு உத்தரவு பிறப்பித்து, தன் பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைக்கிறார். ஒருபுறம், அவள் கணவனிடமிருந்து தனது தேவைகளைப் பெற விரும்புகிறாள். மறுபுறம், அவர் தனது மனைவியின் விருப்பங்களையும் தேவைகளையும் புறக்கணிக்கிறார். திருமணத்தில், கணவன் மனைவிக்கு மட்டுமே துணை அந்தஸ்தை கொடுக்க முடியும் மற்றவை முக்கியமில்லை.. அதனால் அதனை புரிந்து கணவரும் மனைவியும் நடந்துக் கொண்டால் எந்தவித பிரச்சனைகளும் இடைவெளியும் வரவே வராது..
காதலுக்கு தாம்பத்தியம் ஒரு முக்கிய அடிப்படை. இது நாளுக்கு நாள் பரஸ்பர ஈர்ப்பை அதிகரிக்கிறது. திருமண பந்தத்தை வலுவாக்கும். வேலை அழுத்தம், சோர்வு, பதட்டம் போன்றவை தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு இண்டஹ் தாம்பத்தியம் மிக மிக முக்கியமாக கருதப்படுகிறது.. கணவன்-மனைவிக்குள் எத்தனை சண்டை சச்சரவுகள் நடந்தாலும் இரவில் ஒரே படுக்கையில்தான் படுக்கிறார்கள். அவர்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அதனால் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் சகித்துக்கொள்வார்கள்.
இந்த உடல் தொடர்பு ஆன்மீக தொடர்பை பலப்படுத்துகிறது. கணவனின் தேவைகளை அன்பாகவும் நேர்மையாகவும் பூர்த்தி செய்யும் மனைவி அவருக்கும் அவருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கிறார். மனைவியாக தன் பொறுப்புகளை நிறைவேற்றுகிறார். அதேபோல கணவனிடமும் அன்பை எதிர்பார்க்கிறாள். அதுதான் இருவரையும் நெருக்கமாக வைத்திருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையேயான உறவை இனிமையாக்க மனைவியின் விருப்பங்களையும் தேவைகளையும் கணவன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனைவி தன் ஆசைகளை நிறைவேற்ற கணவனின் நம்பிக்கையைப் பெற தொடர்ந்து முயற்சி செய்கிறாள். கணவனின் கண்களில் தன் மீதான காதலை துணைக்கு உடனே தெரியும். எனவே கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தினால், அவர்களின் திருமணம் எப்போதும் இளமையாக இடைவெளி இல்லாமல் இருக்கும்.