Paristamil Navigation Paristamil advert login

குழந்தை

குழந்தை

23 மார்கழி 2024 திங்கள் 08:08 | பார்வைகள் : 308


பேருந்து பயணத்தில் ஓர் குழந்தை
சுருள் சுருளாக கேசம்
முகத்தில் இல்லை வேசம்
அணிந்திருந்தது முககவசம்
அமர்ந்திருப்பது அன்னையின் கைவசம்
நெற்றியில் கருஞ்சாந்து பொட்டு
கன்னத்தில் திருஷ்டி இட்டு
கண்களுக்கு அஞ்சனமை எழுதி
கால்களில் சலங்கை பூட்டி
குட்டி தேவையாய்
மழலை பேச நானும்
மழலையோடு மழலையானேன்....

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்