வாட்ஸ் அப் பயன்படுத்தும் பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை
23 மார்கழி 2024 திங்கள் 08:17 | பார்வைகள் : 141
பிரித்தானியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு, மோசடி தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திலுள்ள Coventry என்னும் நகரில் வாழும் Kasi Reid என்னும் பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் கால் வந்துள்ளது.
தன் மகனுடைய பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் வாட்ஸ் அப் குழுவிலிருந்து தான் அழைப்பதாக அழைத்த நபர் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், தான் அனுப்பியுள்ள code ஒன்றை கிளிக் செய்து பார்ட்டியில் பங்கேற்போருடன் இணைந்துகொள்ளுமாறும் கேட்டுள்ளார் அந்த நபர்.
அந்த நபர் கேட்டுக்கொண்டபடி Kasi அந்த codeஐ கிளிக் செய்திருப்பாரானால், அந்த நபர் Kasiயின் கணக்கை தனது கட்டுப்பாட்டில் எடுத்திருப்பார்.
ஆனால், நல்ல வேளையாக Kasi அந்த codeஐ கிளிக் செய்யவில்லை. ஆக, இப்படி ஒரு மோசடி நிலவுவதாகவும், பிரித்தானியர்கள் தங்களுக்கு இப்படிப்பட்ட அழைப்பு ஏதாவது வந்தால் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
இப்படிப்பட்ட மோசடிகளிலிருந்து தப்புவது எப்படி என்பதை விளக்கியுள்ளார் Hayley Hassall என்னும் துறைசார் நிபுணர்.
முதலில், உங்களுக்கு வரும் அழைப்பு எந்த நாட்டிலிருந்து வருகிறது என்பதை கவனியுங்கள் என்கிறார் Hayley.
ஒரு நல்ல விடயம், உங்களுக்கு செய்தி அனுப்பும் நபர், உங்கள் contact பட்டியலில் உள்ளவரா, அல்லது நீங்கள் பங்குபெற்றுள்ள குழுவில் உள்ளவரா என்பதை வாட்ஸ் அப்பே சுட்டிக்காட்டிவிடும்.
அத்துடன், உங்கள் contact பட்டியலில் உள்ளவர்களிடமிருந்து மட்டும் செய்திகள் வரும் வகையில் நீங்கள் உங்கள் வாட்ஸ் அப் கணக்கைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
ஒரே விடயம்தான், செய்திகள் வந்தால், உடனடியாக பதிலளிக்காதீர்கள், நின்று யோசித்து அதன் பின் செயல்படுங்கள் என்கிறார் Hayley.
உங்கள் நண்பரிடமிருந்து வந்த செய்தியாகத் தோன்றினால் கூட, அவரை அழைத்து, இந்த செய்தியை அனுப்பியது அவர்தானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்கிறார்.