Paristamil Navigation Paristamil advert login

Gare Rosa-Parks தொடரூந்து நிலையம்! - யார் அந்த ரோசா??!

Gare Rosa-Parks தொடரூந்து நிலையம்! - யார் அந்த ரோசா??!

25 ஆவணி 2018 சனி 10:30 | பார்வைகள் : 17815


பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள தொடரூந்து நிலையங்களில் Gare Rosa-Parks நிலையமும் ஒன்று. யார் அந்த ரோசா? இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...!!
 
முன்னர், நிலையம் Rue de l'Évangile அருகாமையில் இருந்ததால், ஆரம்பத்தில் l'Évangile என அழைக்கப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு இந்த நிலையம் உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  டிசம்பர் 13, 2015 ஆம் ஆண்டு, Gare Rosa-Parks எனும் புதிய பெயரில் மீண்டும் திறக்கப்பட்டது.
 
அப்போதைய பரிஸ் நகர முதல்வராக இருந்த Bertrand Delanoë, தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்திருந்தார். பரிசில் உள்ள  தொடரூந்து நிலையங்களில் குறைந்தது 50 வீதமாவது வரலாற்று பெண்கள் பெயரைக் கொண்டிருக்கவேண்டும் என்பதே அந்த முடிவு. அந்த ஆண்டில் சில நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெண்களின் பெயர் சூட்டப்பட்டது. 
 
அப்போது தான் இந்த குறித்த நிலையத்துக்கு Rosa Louise McCauley Parks எனும் அமெரிக்க பெண்ணின் பெயர் சூட்டப்பட்டது. யார் அந்த ரோசா? 
 
இவர் மிக பிரபலமான மனித உரிமைகள் போராளி. உலகின் முதலாவது பெண் சமூக விடுதலை போராளி. 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்து 2005 ஆம் அண்டு தனது 92 ஆவது வயதில் இறந்த அவருக்கும், பிரான்சுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அட சும்மனாச்சும் கூட பிரான்சுக்கு வந்ததும் இல்லை. ஆனால் அவர் அமெரிக்காவில் நிகழ்த்திய ஒவ்வொன்றும் மனித குலத்தின் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டமாக இருந்தது. 
 
அந்த போராட்டம் உலகம் முழுவதும் தேவைப்பட்டதாக இருந்தது. இதனாலேயே உலகம் மிக இலகுவாக அவரை 'வொண்டர் வுமன்' ஆக்கியது. 
 
அவரை கெளரவிக்கும் முகமாக இன்று Gare Rosa-Parks என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்