போர்த்து லா சப்பல் தொடரூந்து நிலையம் - இன்று பிறந்தநாள்!!
23 ஆவணி 2018 வியாழன் 12:30 | பார்வைகள் : 21830
போர்த்து லா சப்பல் தொடரூந்து நிலையம் நாம் அறிந்தது தான்... இன்றைய பிரெஞ்சு புதினத்தில் இது குறித்த சில அறியாத்தகவல்களை தெரிந்துகொள்ளலாம்...!!
Nord-Sud தொடரூந்து நிலையத்தின் (இப்போது அது இல்லை) விரிவாக்கமாக இந்த போர்த்து லா சப்பல் நிலையம் 23 ஆம் திகதி ஓகஸ்ட் 1916 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அட.. ஆம் இன்று நிலையத்துக்கு 102 ஆவது பிறந்த நாள்...!!
Chapel என்றால், கிருஸ்தவர்களுடைய வழிபாட்டுத்தலத்தை குறிக்கும். அதுபோன்ற புனிதமான (??!!) ஒரு நிலையமாக இந்த நிலையம் உள்ளது என்ற அர்த்தத்தில் போர்த்து லா சப்பல் என பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையத்தை Aubervilliers உடன் தொடுக்க, அமைதியாக பணிகள்னிடம்பெற்று வருகின்றது.
அமெரிக்காவின் HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Band of Brothers எனும் தொடரின் ஒரு பகுதியான Crossroads எனும் பகுதியில், இந்த நிலையம் முழுமையாக இடம்பெற்றது.
பதினெட்டாம் வட்டாரத்தின் லா சப்பல் பகுதியையும், Goutte d'Or பகுதியையும் இணைத்து இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் குட்டி யாழ்ப்பாணமும், மறுபக்கம் குட்டி ஆப்பிரிக்காவும் உள்ளது. Goutte d'Or இல் அதிகளவான வடக்கு ஆபிரிக்க மக்கள் வசிப்பதால் இந்த பெயர் வந்துவிட்டது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் போர்த்து லா சப்பல்!!
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan