Paristamil Navigation Paristamil advert login

அஜித்திற்கு நன்றி தெரிவித்த மகிழ்திருமேனி

அஜித்திற்கு நன்றி தெரிவித்த மகிழ்திருமேனி

23 மார்கழி 2024 திங்கள் 14:27 | பார்வைகள் : 9195


மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் உள்ள இப்படம் பல போராட்டங்களுக்கு பிறகு 2025ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் தாய்லாந்தில் துவங்கி படத்தின் முழு படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவித்துள்ளனர்.

இதுபற்றி மகிழ்திருமேனி வெளியிட்ட அறிக்கையில், "சார் உங்களுக்கு விடாமுயற்சி குழுவின் அளவில்லா அன்பும், நன்றியும். நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும், எங்கள் வேலைகளை ஊக்கப்படுத்தும் நபராகவும், எளிமையின் வடிவாகவும் நீங்கள் இருந்தீர்கள். தொடர் முயற்சியால் ஏற்படும் வெற்றி தான் இந்த விடாமுயற்சியின் வெற்றி. தனிப்பட்ட முறையில் நீங்கள் முதல் நாள் படப்பிடிப்பில் இருந்து இன்று வரை உங்களின் அன்பு, ஆதரவுக்கு மிகவும் நன்றி சார்" என அஜித்திற்கு நன்றி தெரிவித்து அவருடன் படப்பிடிப்பின் கடைசிநாளில் எடுத்த போட்டோவையும் வெளியிட்டுள்ளார் மகிழ்திருமேனி.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்