ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடு!!
_crop_615x324.jpg)
17 ஆவணி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 20048
ஏழாம் வட்டாரம் என்றதும் ஈஃபிள் கோபுரம் ஞாபகம் வருகிறதா...? தவறில்லை... அதே ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடும் உள்ளது...
ஏழாம் வட்டாரத்தில் உள்ள Avenue Rapp வீதிக்குள் நுழைந்தால் அங்கே ஒரு நூற்றாண்டு கால வீடு ஒன்றை சந்திக்கலாம். அதன் வாயில், ஒரு இராட்சத அரக்கன் போல் 'கர்ண கொடூரமாய்' காட்சியளிக்கும்.
இந்த கட்டிடம் 5 அடுக்குகளை கொண்டது. அதன் வர்ணமும், கட்டிடம் முழுவதும் நிரம்பி வழியும் சிற்ப வேலைப்பாடுகளும், எப்போதும் மூடியே இருக்கும் அதன் ஜன்னல்களும் அந்த ஒற்றைக் கதவும் ஒரு வித அமானுஷ்யத்தையே தோற்றுவிக்கும்.
இந்த கட்டிடம் 119 வருடங்களுக்கு முன்னர், 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. Jules Lavirotte எனும் கட்டிடக்கலைஞன் இந்த கட்டிடத்தை தனக்காக கட்டினார்.
1901 ஆம் ஆண்டு, 'மிக தனித்துவமான கட்டிட வடிவமைப்பு!' என விருது வாங்கியது இந்த கட்டிடம்.
இந்த கட்டிடக்கலைஞர் என்ன செய்தார், Art Nouveau என அதற்கு பெயர் சூட்டி, அருங்காட்சியமாக மாற்றி விட்டார். ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. அப்போது புதிய பொருட்களாக இருந்த அந்த பொருட்கள், அடுத்த 10 வருடங்களிலேயே மூடுவிழா கண்டது. அது குறித்த பல தகவல்கள் பிறிதொரு பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்.
இந்த கட்டிடம் தற்போது எவ்வித செயற்பாடுகளும் இன்றி மூடப்பட்டே உள்ளது. இந்த கட்டிடம் ஒருவித அச்சத்தையே எப்போதும் தக்கவைத்துள்ளது.
.jpg)