Paristamil Navigation Paristamil advert login

நடுவானில் விமானத்தில் டீ விநியோகிக்கும் பயணி....

நடுவானில் விமானத்தில் டீ விநியோகிக்கும் பயணி....

24 மார்கழி 2024 செவ்வாய் 09:16 | பார்வைகள் : 118


பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் பயணி ஒருவர் சக பயணிகளுக்கு தேநீர் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே விமான பயணத்தில் கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படும். உணவு மற்றும் பானங்களைக் கொண்டு வருவதற்கான கட்டுப்பாடுகள் இருக்கும்.

ஆனால், சமீபத்தில் இண்டிகோ விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது ஆச்சர்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இண்டிகோ விமானம் ஒன்றில் பறந்து கொண்டிருக்கும் நேரத்தில் பயணி ஒருவர் சக பயணிகளுக்கு தேநீர் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆண் ஒருவர் போத்தலில் இருந்து கோப்பையில் தேநீர் ஊற்றி சக பெண் பயணி ஒருவருக்கு கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் இண்டிகோ விமானத்தில் தேநீர் வழங்குவதற்கு இண்டிகோ கேபின் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அதே சமயம் எந்த விமான பாதையில் இந்த சம்பவம் நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.    

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்