பாக்சிங் டே டெஸ்டில் 19 வயது வீரரை அறிமுகமாக்கும் அவுஸ்திரேலியா
24 மார்கழி 2024 செவ்வாய் 09:34 | பார்வைகள் : 128
அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் உடற்தகுதி சந்தேகத்தை எதிர்கொண்டதால், அவுஸ்திரேலிய அணியில் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமாவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி மெல்போர்னில் 26ஆம் திகதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் வரும் இப்போட்டியை 'பாக்சிங் டே' டெஸ்ட் என்று அழைக்கிறார்கள்.
அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் (Travis Head) உடற்தகுதி சந்தேகத்தை எதிர்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக வேறொரு வீரர் விளையாடலாம் என்று கூறப்படும் நிலையில், 19 வயதாகும் சாம் கான்ஸ்டாஸ் (Sam konstas) அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் அவுஸ்திரேலிய டெஸ்டில் அறிமுகமாகும் 4வது இளைய வீரராக கான்ஸ்டாஸ் இருப்பார். மேலும், 2011யில் தென் ஆப்பிரிக்காவில் 18 வயது இளைஞராக அறிமுகமான பாட் கம்மின்ஸின் (Pat Cummins) கீழ் அவர் விளையாடுவார்.
கான்ஸ்டாஸின் சேர்க்கை உறுதிப்படுத்தப்பட்டாலும், மீதமுள்ள லெவனில் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அத்துடன் ஹெட் இன்னும் தாமதமாக உடற்தகுதி தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கான்ஸ்டாஸ் 97 பந்துகளில் ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.