Paristamil Navigation Paristamil advert login

சினிமாவை விட்டு விலகும்: 'புஷ்பா 2' இயக்குனர்...?

சினிமாவை விட்டு விலகும்: 'புஷ்பா 2' இயக்குனர்...?

24 மார்கழி 2024 செவ்வாய் 12:49 | பார்வைகள் : 2297


ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள படம், 'கேம் சேஞ்சர்'. இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம், ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. ஐதராபாத்தில் நடந்த இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'புஷ்பா 2' இயக்குனர் சுகுமார், ''கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும்'' என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இயக்குனர் சுகுமாரிடம், ''ஒரு விஷயத்தை நீங்கள் கைவிட விரும்பினால் அது என்ன?'' என்கிற கேள்வியை கேட்டார். இதற்கு சற்றும் யோசிக்காமல் சுகுமார், ''சினிமாதான்'' என பதிலளித்தார். அவரது பதிலை கேட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சுகுமார் அருகில் இருந்த நடிகர் ராம்சரண் உடனே அவரிடம் இருந்து மைக்கை பறித்து ''சுகுமார் சினிமாவில் இருந்து போக கூடாது'' எனத் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்