Paristamil Navigation Paristamil advert login

விஜய் சேதுபதி - ஹரி - நயன்தாரா புதிய கூட்டணி!

விஜய் சேதுபதி - ஹரி - நயன்தாரா புதிய கூட்டணி!

24 மார்கழி 2024 செவ்வாய் 12:52 | பார்வைகள் : 173


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஹரி. சாமி, ஐயா, சிங்கம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். கடைசியாக விஷாலை வைத்து ரத்னம் படத்தை இயக்கினார். ஆனால் இந்தபடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் ஹரி இறங்கி உள்ளார். இவரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளாராம். இதன்மூலம் இவர்கள் இருவரும் முதன்முறையாக இணைய உள்ளனர்.

ஹைலைட்டாக இந்த படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்க உள்ளனராம். ரவுடி பிக்சர்ஸ் மூலம் இதுநாள் வரை சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து வந்த இவர்கள் இப்போது முதல்முறையாக ஒரு பெரிய படத்தை தயாரிக்கவுள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்